தேவதையடி நீ



தாகம் தீர்க்கும்
என் தாயகத்து
தேவதையடி நீ......

இன்னிசை பாடும்
என் இதயத்து
இன்ப வீணையடி நீ....

கண்கள் பேசும்
என் கனவுலக
கண்மனியடி நீ....


வண்ணம் மின்னும்
கண்ணிரண்டை
கொண்டவளே.....

மாதந்தோறும் மார்கழி
குளிரை மனதிற்கு
தந்தவளே....

செம்மதுர சேலையிலே
சித்திரம் கோடி
வரைபவளே.......

Comments