வரம் வேண்டுமடி எனக்கு




உன் சேலைக்குள்
சிக்கித் தவிக்கும்
சின்னஞ்சிறு பூவாக...

என் உயிர் வரை
ஊடுருவும்..
உன் பார்வைக்குள்
பைத்தியமாக......

கானமழை பொழியும்
உன் கூந்தல் காட்டில்
குருநில மன்னனாக.....

என் இதயம்..
தொட்டு பேசும்
உன் இமைகள் மூடும்
கருவிழியாக...

வரம் வேண்டுமடி
எனக்கு.....

Comments