எனக்கென பிரம்மன்
செய்து வைத்த
சிற்ப சிலை காவியமே....
என் காலந்தோறும்
கவிதை சொல்லும்
கண்பேசும் ஓவியமே....
என் வாழ்நாள் முழுவதும்
வசந்த மழை
வீசச்செய்யும் வர்ணஜாலமே.....
கண்ணான கண்மனியே..
கண்ணுக்குள்
காந்த விசை கொண்டவளே....
பொண்ணான பெண் நிலவே..
என் பேனா முழுதும்
உன் புகழ் பாடச்செய்தவளே....
Comments
Post a Comment