உன்னாலே உன்னாலே



உன் கண்கள் தந்த
மயக்கத்தினால்..
எனக்குள் காதல் காய்ச்சல்
வந்ததடி......

உன் உதடுகள் தொட்டு
உரசியதால்..
உடலில் உஷ்ணம் ஏறி
உயிர்போகுதடி.......

உன் இடை அழகை
பார்த்ததினால்..
இதயத்தில் இம்சை வந்து
கொள்ளுதடி.......

உன் விரல்கள் தீண்டி
வருடியதால்..
விழிகள் இரண்டும் வழிமறந்து
திசைமாறியதடி.......

Comments