என் அன்பே


கருநீல கூந்தல் கொண்ட
கவிமழை கனியமுதே..
உன்னோடு காதல் சேர
காலமெல்லாம் காத்திருப்பேன்
என் அன்பே.......

வசந்தம் தேடும்
என் விழிகள் இரண்டை
உன் வானவில் தேடியே..
உன் வீட்டு வாசலில்
வட்டமிட வைத்த
என் வண்ண மலரே.....

உன் சித்திரம் கண்டே
சொக்கிய என் நெஞ்சை
இன்று உன் சேலைக்குள்
சிக்க வைத்த..
என் செந்தமிழ் நதியே.....

Comments