விமானப் பயணத்தின் போது உங்கள் உடைமைகள் உங்களிடம் வரா விட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்.




உங்களது உடைமைகள், நீங்கள் விமானத்திலிருந்து இறங்கியவுடன் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், உடனடியாக மேலதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். உங்கள் உடைமை விமான நிலையத்தில் இல்லாவிட்டால், உடனடியாக அதிகாரிகளிடமிருந்து அதற்கான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த படிவத்தில் எல்லாம் சரியாக குறித்திருக்கிறதா என்றும், அதிகாரியின் கையொப்பம் இருக்கிறதா என்பதையும் கவனமாக பார்க்க வேண்டும்.

உங்கள் உடைமைகள் காணாமல் போய்விட்டால், நஷ்ட ஈடு வாங்க வேண்டும். விமான நிருவனங்கள் நஷ்ட ஈடு கோருவதற்காக கால அவகாசம் வைத்திருக்கிறார்கள். எனவே புகார் செய்ய வேண்டும். நஷ்ட ஈடு ஒவ்வொரு விமானக் கம்பெனிகளுக்கும் வேறுபடும்.

பொதுவாக விமான நிறுவனம் உங்களின் உடைமைக்குரிய மதிப்பையே கொடுக்கும், அதற்கு நீங்கள் அத்தாட்சி தர வேண்டும், நீங்கள் உங்களின் தொலைந்த பொருட்களின் பட்டியலையும், அதன் மதிப்பையும் மிகச் சரியாக கொடுக்க வேண்டும்.

சில விமானக் கம்பெனிகள் பணமாக கொடுத்து விடும், விமான நிறுவனங்கள் சில பொருட்களுக்கு பொறுப்பேற்பதில்லை, உதாரணமாக,

பணம்,
நகைகள்,
வெள்ளிப் பொருட்கள்,
ஆவணங்கள்,
அலுவலகப் பொருட்கள்

இதற்கு மேலும் நீங்கள் விமான நிறுவனத்தை அணுகி விவரம் பெற்றுக்கொள்ளலாம். விமான நிலையத்தில் ஏதேனும் தொலைந்து விட்டால் விமான நிறுவனங்கள் பொறுப்பல்ல. பொதுவாக உங்களுடைய புகார்கள் 120 நாளில் தீர்க்கப் பட வேண்டும். 

Comments