அங்காடிகள் செயல்படுவதில் அங்காடிகள் திறக்கப்படாமல் இருப்பது பற்றியோ, குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் எடைக்குறைவு, வசூலிக்கப்படும் விலையின் வித்தியாசம், வழங்கப்படும் பொருட்களின் தரக்குறைவு, அங்காடிகளில் தயாரிக்கப்படும் போலிப்பட்டியல் பற்றிய விவரம், கள்ளச்சந்தையில் பொருட்கள் அனுப்புதல் விவரம் ஆகியவற்றை தெரிவிக்க அங்காடியில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களை சேர்ப்பித்தும், அதன் நகல்களை வட்ட வழங்கல் அலுவலர்/ உதவி ஆணையர்/ கூட்டுறவு சங்கங்களின் துணை/ இணை பதிவாளர்/ மாவட்ட வழங்கல் அலுவலர்/ வருவாய் கோட்ட அலுவலர்/ உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சென்னை-5 க்கு அனுப்பியும் தெரிவிக்கலாம், மேலும் புகார் தெரிவிக்கப்பட வேண்டிய அலுவல்ர்களின் தொலைபேசி எண்கள் குடும்ப அட்டையில் உள்தாளில் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அவர்களுக்கு தொலைபேசி மூலம் புகார்களை தெரிவிக்கும் பட்சத்தில் உடனடி தீர்வு நடவடிக்கைகள் தொடரப்படும், துறையின் இனையதள்ம்: www.consumer.tn.gov.in , மற்றும் மின்னஞ்சல்: ccs@tn.gov.in,
consumer@tn.nic.in
Comments
Post a Comment