இரயில்வே சேவையாளர்களின் குறைபாடு





ரயிலகள் கண்டிப்பாக பிரயாணிகளுக்குத் தண்ணீர் வசதி செய்து தரப்பட வேண்டும், இந்த வசதிக்கும் சேர்த்துதான் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது,

மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம். ஒரு குடும்பத்தார் பதிவு செய்த பயணச்சீட்டுகளோடு. ஒரு ரயில் பெட்டியில் பயணம் செய்தார்கள், அப்போது ரயில் பெட்டியில் கழிவறையில் இருந்த தண்ணீர் குழாய் உடைந்து விட்டதால் தண்ணீர் வரவில்லை, பயண முடிவு வரை ரயில்வே நிர்வாகம் தண்ணீர் வசதி கழிப்பறையில் கொண்டுவர எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை. புகார் அளித்த பின்னரும் ரயில்வே நிர்வாகம் உடைந்த குழாயை சரி செய்ய எந்த முயற்சியும் செய்யவில்லை.

தங்கள் புகார்களுக்கு பரிகாரம் தேடுவதற்காக மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தனர். ரயில்வே நிர்வாகம் புகார்களை மறுக்கவில்லை, எனவே மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் மனுதாரர்களுக்கு ரயில்வே நிர்வாகம் ரூ. 55,000/- இழப்பீடாகவும், புகார் செலவுகளுக்காக ரூ.1000/- கொடுக்கம்படி ஆணையிட்டது.

ரயில்வே நிர்வாகம் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தது, மாநில ஆணையம் மாவட்ட ஆணையத்தின் தீர்ப்பை உறுதி செய்து. இழப்பீட்டை ரூ.55,000/- லிருந்து ரூ.10,000/- ஆக குறைத்தது.

இதையும் எதிர்த்து ரயில்வே நிர்வாகம் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் முறையிட, தேசிய நுகர்வோர் ஆணையம் அவர்களது மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, மாநில ஆணையத்தின் ஆணையை உறுதி செய்தது.

Comments