காற்றோடு கலைந்து விட்ட
உன் சேலைக்குள் மாட்டிக் கொண்ட
என்னை....
உன் விரலோடு கைகோர்த்து
போவாயோ!!!!!
கவி எழுத கற்றுக்கொடுக்கும்
உன் கண்ணோடு கலந்து விட்ட
என் கனவுகளை....
உன் காதலோடு வழிநடத்தி
செல்வாயோ!!!!!
பூவாசம் வீசும் பாவையென்ற
உன் நேசத்தில் ஒன்றிவிட்ட
என் சுவாசத்தை.....
உன் வானோடு மிதக்க வைக்க
செய்வாயோ!!!!!
காதல் ஒளிவீசும் நிலவுமுன்னே
உன் நிழலுக்குள் அலைந்து வரும்
என் நினைவுகளை.....
உன் வயதோடு அணைத்துக்கொண்டு
வருவாயோ!!!!!!
Comments
Post a Comment