வெளிநாட்டு வேலை




வாழ வேண்டிய நாட்களுக்காக
வாழும் நாட்களை தொலைத்து
தேடிக்கொண்டிருக்கும் விட்டில் பூச்சிகள்
நாங்கள்.....

அழுகுரல் இருந்தும்
அதை அனைத்து விட்டு
ஆவல் கேட்கும் அம்மாவிடம்
அழகாய் சிரிப்பவர்கள்
நாங்கள்......

இன்பம் இயக்கும்
இளமை இருந்தும்
இன்னலில் இனியவை
காணும் இலைமறைக் காய்கள்
நாங்கள்......

குரல் மட்டும் கேட்டு
காதல் வளர்த்தோம்
கை தொட்டு பேசும்
கண்மனியை காணலில்
தவிக்க வைத்தோம்......

செல்லம் பேசும் செந்தளிரை
காண முடியாமல்
அப்பா எனும் வார்த்தையை
அலைபேசியில் மட்டுமே
கேட்க கண்டோம்........

Comments