காகித மடல் முழுதும்
கவிதை எழுதி
காதலி... உன்னில் வரைய
கண்பூத்து காத்திருந்தேன்....
இன்பம் எல்லாம்
உன் இதழை நோக்கி செல்ல
இதயமே... இளமயில் உன்னில் சேர
இரவும் பகலும் காத்திருந்தேன்......
கனவுகள் கண்டே என்
காலங்கள் கடந்து போக
கதை பேசும் காவியமே...
உன்னில் கலந்து விட
காத்திருந்தேன்.....
உன் ஏக்கம் கூடியே
என் எடை குறைய
என்னம் யாவும் எழில்வானம்....
உன்னில் பறந்திட காத்திருந்தேன்....
Comments
Post a Comment