தாலாட்டு



தாய்-மகனுக்கு ஒரு தாலாட்டு....

என் அகம் முழுதும்
ஆசை வைக்க..
அளவுகடந்த அன்பு வைத்தேன்....

பரிவுகாட்ட பலர் இருந்தும்
என் பனிமழை உன்மீது
மட்டும் பாசம் வைக்க...

என் சுகமெனும்
செல்வத்து செந்தமிழே.....

என் தேகம் கலந்த
சுவாச மலரே......

என் உடலோடு
ஒட்டி வந்த என்னுயிர் மகனே
நீ கண்ணுருங்கு.....

தந்தை-மகளுக்கு ஒரு தாலாட்டு.....

நீயே என் நீலவானத்து
நதியழகே....

என் இரத்தத்தில் பிறந்து வளர்ந்த
இதய நிலவே....

நானே வரைந்து வைத்த
வாசம் வீசும்
என் வசந்த மலரே....

புன்னகை காட்டியே
என் புது உலகை  காண வைத்த
என் பூமகளே......

பொதுவாக உனக்காகவே
ஓடோடி உழைத்தேனடி
என் பொண்மகளே
நீ கண்ணுருங்கு......

மனைவி-கனவனுக்கு ஒரு தாலாட்டு.....

தாய் வீட்டு
பாசம் நீ....

என் தோல் தொட்ட
தோழன் நீ....

மதியில் பதிந்த
என் மனமகிழ்
மணவாளனும் நீ...

உனக்கெனவே நான் பிறந்தேன்
என் உலகம் முழுதும்
உன்னோடு உயிர் கலந்தேன்
என் காதல் கனவனே
நீ கண்ணுருங்கு......

கனவன்-மனைவிக்கு ஒரு தாலாட்டு.....

தென்றல் வீசி
தினமும் தீண்டி பேசும்
என் தேவலோகத்து
தேவதையடி...

காலம் யாவும்
என் கண்ணருகே காதல்பேசும்
கலைமகளே....

ஆயிரம் தூரம்
அலைந்து வந்தாலும்
அனுதினமும் உன்னோடு
அடங்க வைக்கும்
என் அன்பு மனைவியே
நீ கண்ணுருங்கு......

Comments