புத்தாண்டு வாழ்த்து


கசந்த காலங்களை
களையச் செய்வோம் இன்றோடு.....

இனிந்த காலங்களை
நினைத்து பார்ப்போம் புதுநாளோடு.....

வலித்த உறவுகளை
உதிரச் செய்வோம் இன்றோடு

உணர்வுள்ள உறவுகளை
சேர்த்துக் கொள்வோம் புதுநாளோடு.....

தோல்வி தந்த தலைவிதியை
மறக்கச் செய்வோம் இன்றோடு......

வெற்றியை மட்டுமே
வரவேற்த்து கொள்வோம் புதுநாளோடு.....

வருடத்தில் பல நாள் பொன்நாள்
வருடத்தின் பொன்நாள்
இந்த முதல் நாள்...... 

Comments