கட்டியணைக்கப்போகிறாய்


மின்னல் பதித்த விழியால்
என்னை கொல்லப்பார்க்கிறாய்..

இன்பம் வடிக்கும் இதழால்
என்னை திட்டித்தீற்கிறாய்..

தீயில் சுட்ட மலராய்
என்னை வெறுத்துப்பார்க்கிறாய்..

பொறுத்துப்பாரடி
என் காதலை கண்டு

நீயே ஒருநாள் எனை கட்டியணைக்கப்போகிறாய்...




ரா.வினோத்

Comments