ஏழைகள் எதிர்பார்க்கும்
எட்டா கனியா நீ.....
வசதி படைத்தவர்களை
வாழ வைக்கும்
வங்கி கடலா நீ.....
உன்னை தொலைத்தாலும்
தொல்லை..
தொலைக்காமல் வீட்டில்
பூட்டி வைத்தாலும்
தொல்லை.......
சொந்தங்கள் கூட
உன்னைப் பார்த்துதான்
சொந்தக்காரன் என்கின்றன......
தனம் எனும் தாரகையில்
மின்னும் உன்னை தேடும்
நெஞ்சங்கள் பல.....
உன்னால் இவ்வுலகில்
வாழ்பவர்கலும் பலர்..
மாண்டவர்கலும் பலர்......
உழைப்பவனுக்கும் உணவாகிறாய்
கொள்ளையடிப்பவனுக்கும்
தீணியாகிறாய்.......
வயது வந்த பெண்னை
வாழவைக்கவும் நீ வேண்டும்..
அறிவுக்கு அழகு
சேர்க்கும் கல்விக்கும்
நீ வேண்டும்......
Comments
Post a Comment