வேப்பிலை
வேப்பிலையை வேக வைத்து சாற்றை அன்றாடம் அருந்தி வந்தால் உடலில் உள்ள நோய்க்கிருமிகள் அழிவதுடன், கிருமிகள் உற்பத்தியாகாமலும், அன்றாட உடலுறுப்பு தேய்மானங்கள் புதுப்பிக்கப்பட்டும் பிணியின்றி வாழ்ந்திடலாம்
வேப்பிலையையும், மிளகையும் உப்புடன் சேர்த்து அரைத்து தூதுவளங்காயளவு கொடுத்து வர வயிற்று கிருமிகள் அழியும்.
வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து போட கட்டி, பரு உடையும்.
வேப்பிலையை சிறிய அளவில் ஆரம்பித்து சிறிது கூட்டி சாப்பிட்டு வந்தால் பாம்பு கடித்தாலும் விஷம் ஏறாது, பெரும் பிணியும் வராது.
வேப்பிலை கொழுந்து
இதனுடன் அதிமதுரசூரணத்துடன் சேர்த்து அரைத்து மாத்திரை செய்து தினம் ஒரு வேலை கொடுத்து வர அம்மையின் பாதிப்பு குறையும்.
இதனுடன் ஓமம், மிளகு, வசம்பு, பூண்டு ஓர் அளவாக அரைத்து உள்ளுக்கு கொடுக்க வயிற்று பொருமல், அஜீரணம், குழந்தைகளின் மாந்தம் தீரும்.
வேப்பம்பூ
நாள்சென்ற வேப்பம்பூவுக்கு சன்னி, நீடித்த வாதம், ஏப்பம், மலக்கிருமி, இவை போகும், பித்தம் சாந்தப்படும்.
வேப்பம் வித்து
குஷ்டம், சர்ப்ப விஷங்கள், சன்னி, சொறி, சிரங்கு, ஏப்பம், மலக்கிருமி இவை போகும்.
இதை வெல்லம் கூட்டி அரைத்து ஏழு நாள் காலையில் சாப்பிட மூலம் குணமாகும்.
வேப்பம் பட்டை
காய்ச்சல் வந்தால் இப்பட்டையை கசாயம் செய்து அருந்திட குணமாகும்.
Comments
Post a Comment