அம்மா


உயிரை பிரித்து
உடலை வருத்தி
உதிரம் தந்து என்னை
பெற்றெடுத்த தாயே......

பால் தந்து 
பாசம் ஊட்டியவளே..
என் முகம் பார்த்த
முதல் பதுமையும் நீயே.....
...
அன்பென்ற ஒன்றை
அழியாமல் என்னுள்
அமர வைத்தவளே......

அகம் அறிந்து அனுதினமும்
அன்னம் இட்ட
என் சேவகியும் நீயே..

உறவுகள் பல இருந்தும்
என்னுள் உயிருக்கு உயிராக
உள்ளத்தில் உணர வைத்தவளே......

நீயின்றி நானில்லை
என்றுமே நீயில்லாமல்
நான் நிலைக்கபோவதும் இல்லை.......

Comments