மழலைச் செல்லம்


பிஞ்சு விரல் பதிக்கும்
உன் இதத்திற்கும்....

வஞ்சமில்லா சிரிக்கும்
உன் புன்னகைக்கும்....

மொழியறியா பேசும்
உன் குரலுக்கும்.....

அடிமையானவன் நான் மட்டுமல்ல
உன்னை பார்க்கும் ஒவ்வொருவரும்......

நளொன்று பூக்கும்
பூக்களுக்கில்லை உன் வாசம்...

வாழ்வாங்கு வாழும்
மாந்தர்களுக்கில்லை உன் பாசம்...

சுக துக்கம் தெரியா
பருவம் உனக்கு...

மனம் என்ற மாளிகையில்
உனக்கே புகழிடம்....

குறும்பு செய்யும் உன்னை
குறை சொல்லவும்
மனமில்லை எங்களுக்கு....

ஓடி ஆடி விளையாடினாலும்
ஓய்வென்பது ஏதுமில்லை
உன் கால்களுக்கு....

Comments