கவிதைகள் கோடி


உன்னை காணாத கண்ணும்
குருடாய் ஆனதடி...

உன்னோடு பேசாத சொல்லும்
ஊமையாய் போனதடி...


உன் விரல் நுனி
பட்டால் போதுமடி எனக்கு

என் விழியில் விழும் கண்ணீரும்
வேகமாய் நிற்குமடி...

உன் கண்பார்த்து
முறைத்தால் போதுமடி எனக்கு

என் கை முழுக்க கவிதைகள்
கோடி கொட்டுமடி...


ரா. வினோத்

Comments