நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

இந்த பழமொழியின்படி நோயின்றி வாழ்ந்தோமானால் அளவற்ற செல்வத்தைப் பெற்றவர்கள் ஆகின்றோம் அல்லவா, நோயின்றி வாழும் வழியை இதன் மூலம் அறிவோம்

மனிதர்களுக்கு நோய்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை ஆராய்ந்து வருகிறது விஞ்ஞான உலகம். ஆனால் மனிதர்களுக்கு மட்டும் ஏன் நோய்கள் வருகின்றன என்பதை மெஞ்ஞானத்தால் மட்டுமே அறிய முடியும். அதாவது மனித இனத்தை தவிர தன்னிச்சையாக சுதந்திரமாக திரியும் ஜீவராசிகள் முதுமையிலும் நோயின்றி வாழ்கின்றனவல்லவா? விதி விலக்காக நோய் ஏற்படின் மற்றவர்களின் உதவியையும் நாடுவதில்லை என்பது எல்லோர்க்கும் தெரிந்த விசயமாகும். மேலும் விலங்கினங்களும் பறவை இனங்களும் முதுமையடைந்து மூக்கு கண்ணாடி போட்டதாகவும் தெரியவில்லை. ஊன்றுகோல் உதவியை கொண்டு அலைந்ததாகவும் தெரியவில்லை.  எதிர்காலத்திற்காக தேனி, எரும்பு தவிர உணவுகளை செமித்து வைத்ததாகவும் தெரியவில்லை. இதற்கு எல்லாம் மூலக்காரணத்தை ஆராய்ந்து பார்க்கும் போது முதற்படியாக நாம் புரிந்து கொள்வது:

அவை நோய்களினால் பெரும்பாலும் தாக்கப்படுவதில்லை என்பதாகும். மனிதர்களுக்குக் கட்டுப்படாத விலங்கினங்கள், பறவையினங்களுக்கு ஏன் நோய்கள் வருவதில்லை என்பதை சிந்தித்து பார்க்கின்ற போது ஓர் உண்மை புலப்படுகிறது. அதாவது அவை உட்கொள்ள வேண்டிய ஐந்து சுவைகளான காரம், கசப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகளுக்குறிய உணவுப்பொருட்களை காய், கனி, இலை, வேர், பட்டை, விதை என்ற தாவரத்தின் பல பாகங்களை உட்கொள்கின்றன.

தரணியில் உதித்திட்ட சகல உயிர்களும் என்றோ மடிவது நியதி. எனவே இடைப்பட்ட காலத்தில் ஆரோக்கியமாக நரை, தரை, மூப்பு, பிணி நோயின்றி இளமையுடன் நீண்ட காலம் வாழ சித்தர்களும் "காயகல்பம்" உண்டனர். காயகல்பமாக நெல்லிக்காய், கடுக்காய், தாண்டிக்காய் என்றும் பல தாவரப் பகுதிகளை உண்டு ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பல நற்செயல்களைச் செய்து காட்டினர். அவர்போல் நாம் ஏன் வாழ முடியாது.

நாமும் நலமாக வாழ வீட்டில் உள்ள தாவரத்தை கொண்டு இல்லாதவற்றை நாட்டியும் அவற்றின் பயன்களை தகுந்த முறையில் பயன்படுத்த நாம் நாட வேண்டிய தாவரத்துள் மரம், செடி, கொடி, புல், பூண்டு, பாசி, பன்னம் என்பன அடங்கும். இவற்றின் பல்வேறு பகுதிகள் பல்வேறுபட்ட நோய் தீர்ப்பதில் வல்லவர்களாக இருப்பதால் நாம் அவற்றின் பயன்களை இயன்றவரை அறியவும் பயன்படுத்தவும் தெரிந்திரிக்கவேண்டும்.

Comments