வேம்பின் மருத்துவ குணங்கள்




1. வேம்பின் இலையானது சூரிய வெப்பத்தால் நமது உடல் தாக்கப்பட்டு நோய்க்குள்ளாகும்போது அன்னையைப் போல் நம் துன்பங்களை போக்கும் சக்தி வாய்ந்தது. இதனால்தான் அம்மை நோய் பரவும் போது வீடுகளின் வாயிலில் வேப்பிலை கொத்து வைப்பதும், மஞ்சல் கலந்த நீரில் வேப்பிலை போட்டு தெளிப்பதும் வழக்கம். வேம்பிற்கு வெப்பத்தின் வீரியத்தை தணிக்கும் தன்மையும், நஞ்சுக்கிருமிகளை அழிக்கும் தன்மையும் அதிகம் உண்டு.

2. வேப்பிலை இட்டு காய்ச்சிய நீரைக் கொண்டு பிள்ளை பெற்ற நங்கையை குளிப்பாட்டலாம், இதனால் உடல் நலம் பேணப்படும்.

3. வேப்பம்பட்டையை இடித்து சாறு எடுத்து தேமல், படை, போன்ற சரும ரோகங்கள், உடல் தடிப்பு போன்றவற்றை நீக்க பயன்படுத்தலாம்.

4. வேப்பம்பூ இரத்தத்தை சுத்திகரிக்கச்செய்யும், பித்தம் சமன்படும், மலக்கிருமிகளை அழிக்கும்.

5. வேப்பம் விதையானது நஞ்சை முறிக்கும் தன்மையுடையது, விதையை உலர்த்தி இடித்து பயன்படுத்துலாம்.

6. வேப்பம் பிசின் தாது விருத்திக்கும், மூளை பலத்திற்கும் உதவும், இது இம்மரத்தில் இருந்து வழியும் கழிவுப் பொருளாகும்.

7. வேப்பம் பிசினை ஊற வைத்து அதன் தெளிவை ஒரு அவுன்ஸ் வீதம் மூன்று வேலை கொடுத்து வர சீதபேதி நீங்கும்.

8. வேப்பிலை, தேன், நெய் இம்மூன்றையும் கலந்து புகைப்போட்டால் குழந்தைகளுக்கு தோன்றிய காய்ச்சல் தணியும்.

9. இரவில் வேப்பம்பூவினை சுத்தமான நீரில் ஊறப்போட்டு அதிகாலையில் அந்நீரை பருகி வந்தால் உடல் நல்ல ஊட்டமும் சக்தியும் பெரும்.

Comments