அன்பு


கடவுள் சொன்ன கவிதையும்
காதல் சொல்லும் கவிதையும்
அன்பு.....

பாசம் செல்லும் பாதையில்
மனிதன் பேசும் வார்த்தையில்
இருக்கட்டும் அன்பு.....

உலகத்தை வாழவைப்பதும்
உணர்வுள்ள உள்ளத்தை வாழவைப்பதும்
அன்பு.....

தாய்மை தந்த வேதம்
கருணை வாழும் தெய்வம்
அன்பு.....

மதங்கள் மாறுபட
கோபங்கள் குறைந்திட
வேண்டும் அன்பு.....

உயிர்கள் வாழ உரமாக
இன்பம் தரும் இதயமாக
இருக்கட்டும் அன்பு.....

கல்லாத மனதையும்
கல்லான மனதையும்
கரையைச்செய்யும் கரைபொருள்
அன்பு.....

Comments