மண நாள் இரவில்
முழு நிலவாய் நீ..
கண்கள் மட்டுமே
பேச கண்டோம் அதில்
காதல் வார்த்தை மட்டுமே
வாசிக்க கண்டோம்..
என் கைகள் இரண்டும்
உன் இடை சேர்ந்து
கரை சேர
எனக்கு கதைகள் பேசி
கண்ணங்கள் தந்தாயடி..
விடியாத இரவும்
முடியாத குளிரும் நீண்டிட
என் இதழ்கள் பதிந்த
உன் இமைகள் இரண்டும்
எனக்கு உன் முழுக்கவிதையையும்
காட்டியதென்னடி..
இரவு முழுதும்
இருள் இருக்க
கட்டில் முழுதும்
காதல் மலர் பூக்க
உன் உதட்டோரம் இருளில்
என் வயதிருக்குதடி..
தீண்டி தீண்டி
திகைத்திருந்த நெஞ்சில்
தீரா இன்பம் காண வைத்தாய் நீ..
பாதம் தொட்டு
பணிந்தாய் என்னை
உன் பாசம் காட்டியே
என்னை பணிய வைத்தவளும் நீ..
உடல்கள் கலக்கும்
ஓவியம் வரைய நினைத்தே
உன்னில் உயிர் கலந்தேன்
என் உலகை மறக்க..
சத்தமில்லா காட்டில்
முத்தமழை பொழிந்தாய்
இத்தனையா என நினைக்க
என்னுள்ளே காதல் ராகம் பாடினாய்.....
ரா.வினோத்
Comments
Post a Comment