மாவிலை, மாங்காய், மாமர வேர், மாம்வித்து மற்றும் மாம்பழம் மருத்துவ குணங்கள்



மாவிலை

மாவிலைகளை நீர்விட்டு வேக வைத்து அவ்வப்போது கசாயம் செய்து குடித்து வந்தால் நம் உடலில் நீரினால் உண்டாகும் வியாதிகளை நீக்கிகொள்ளலாம்.

மாங்காய்

மாங்காயை உணவில் சேர்ப்பதால் பெருங்குடலில் உண்டாகும் புற்றுநோயை குணப்படுத்துகிறது. கல்லீரலுக்கு வலிமை தருகிறது. ஆனால் தனிப்பச்சை காயை உண்ண பல தீங்கு உண்டு.

மாமர வேர்

சீதரத்தபேதி, வயிற்று கடுப்பு, வாந்தி இவை யாவும் மாமர வேரை தண்ணீரில் காய்ச்சி மூன்று வேலை குடிக்க குணமாகும்.

மாம்வித்து

சிறுவர்களுக்கு உண்டாகும் குடற்புழுக்களை போக்க கசாயம் செய்து மூன்று வேலை குடிக்க குணம் உண்டாகும்.

மாம்பழம்

உமிழ் நீரை சுரக்க செய்யும், ஜீரணத்தை எளிதாக்கும், மலட்டுத்தன்மையை நீக்கும், பசியை உண்டுபண்ணும், சொறி, சிரங்கு நீங்கும், ஆண்மை மிகுதியாகும், முகவரட்சியை நீக்கும், இருதயத்திற்கும் மூளைக்கும் பலம் குடுப்பதுடன் பெண்களின் மாதவிலக்கை ஒழுங்காக்கும்.

Comments