இதயம் தொட்டு



இதயம் தொட்டு பேச நினைக்கிறேன்
நீயோ இடம்மாறி போக நிற்கிறாய்...

கனவுகள் கோடி சுமந்து நிற்கிறேன்
நீயோ கண்பார்த்து பேச மறுக்கிறாய்...

அன்னம் விட்டு தவித்து நிற்கிறேன்
நீயோ உன் அசட்டு சிரிப்பை கூட
தரமறுக்கிறாய்...

இன்று எல்லாம் தவிர்த்து
உனக்காக தனித்து நிற்கிறேன்

இன்னுமா என்னை விட்டு ஒதுங்கி நிற்கிறாய்...



ரா.வினோத்

Comments

Post a Comment