தொட்டனைத்து இதழ் பதித்த
உதடுகள் இன்று..
உறவே வேண்டாமென்று
உதறி விட்டு போனதடி......
கட்டியனைத்து கதைகள் சொன்ன
கண்கள் இன்று..
காதலே இல்லையென்று
கண்ணீர் மட்டும் தந்தடி.....
உலகம் முழுதும் உன்னை சுற்றியே
என்றிருந்த என்னை இன்று..
உள்ளத்தை கொன்று
உயிரை சிதைத்து சென்றாயடி.....
ரா. வினோத்......
Comments
Post a Comment