குழந்தை வளர ஏணிப்படிகள்





1. குழந்தைகளிடம் பொறுமை காட்டுங்கள், சொல்லிக்கொடுக்கும்போது பாடங்களை சற்று தாமதமாக கற்றுக்கொள்கிறான் என்றால் பொறுமை இழந்து திட்டாதீர்கள், தன்னால் படிக்க முடியவில்லை என்று, படிப்பின் மீது வெருப்பு வந்து விடும்.

2. குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள், உடல் வலிமையும், மன வலிமையும் கொடுக்கும்.

3. குழந்தைகளை அடிக்காதீர்கள், அவர்களிடம் பயம் ஏற்பட்டுவிடும், நமக்கு பாதுகாப்பு இல்லையே என்ற பயம், உடலையும், உள்ளத்தையும் பாதித்து விடும்.

4. பிள்ளைகளுடன் நண்பர்களாக பழகுங்கள், அவர்கள் உங்களுடன் பேச, பழக முன்வரட்டும்.

5. குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுகளை கொடுங்கள், பால், பழம், காய்கறிகள், கீரைகள் போன்ற இயற்கை உணவுகளை தாராளமாக கொடுங்கள்.

6. வீட்டு வேலை, தோட்டவேலை, மேலும் உங்களுக்கு உதவும் போது அவர்களை பாராட்ட கற்று கொள்ளுங்கள், அவர்களுக்கு உழைப்பின் மீது ஆர்வம் ஏற்படும்.

7. அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள், இதனால் அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மைதான் வளரும்.

8. குழந்தைகளின் எதிரிலேயே குடும்ப சண்டை போடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

9. பேச்சினிடையே குடும்ப வரவு செலவுகளைப் பற்றி சொல்லாதீர்கள், அது ஏழ்மை நிலையை காட்டுவதாக இருந்தால், தாழ்வு மனப்பான்மையையும், பணக்கார நிலைமையை காட்டுவதாக இருந்தால் தலைக்கனத்தையும் உண்டாக்கும்.

10. கண்டிப்புடன், ஆனால் கண்கானிப்புடன் சுதந்திரமாக வளர விடுங்கள், இது தன்னம்பிக்கையுடன் கெட்டுப்போகாது வளர உதவும்.

Comments