இதழே இதழே
உன் இதயத்திடம் சொல்
என் இன்பம் யாவும் உன்னை சுற்றியே என்று....
கனவே கனவே
உன் கவிதையிடம் சொல்
என் காலங்கள் யாவும் உன் காதலுக்காகவே என்று....
நிலவே நிலவே
உன் நிஜத்திடம் சொல்
என் நிகழ்காலம் யாவும் உன் நிழல்பின்னே என்று.....
உயிரே உயிரே
உன் உள்ளத்திடம் சொல்
என் உலகம் யாவும் என்றும் உனக்காகவே என்று....
ரா. வினோத்
Comments
Post a Comment